சீரா ஆலு
Appearance
சீரா ஆலு முளைகட்டிய பயறுடன். | |
வகை | பொறித்தல் |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | துணை உணவு |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | இந்திய துணைக்கண்டம் |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக |
முக்கிய சேர்பொருட்கள் | உருளைக்கிழங்கு சீரகம் விதைகள், மசலாப் பொருட்கள் |
சீரகம் உருளை (சீரா ஆலு-Jeera aloo) என்பது வழக்கமான இந்தியச் சைவ உணவாகும். பெரும்பாலும் இது துணை உணவாகப் பூரி,[1] சப்பாத்தி, ரோட்டி அல்லது பருப்புடன் சூடாகப் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு (ஆலு), சீரகம் (ஜீரா)[1]மற்றும் இந்திய மசாலாப் பொருட்களின் தூள் முக்கியமான பொருட்களாகும். சிவப்பு மிளகாய்த் தூள், இஞ்சி, கொத்தமல்லி தூள், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை மற்ற தேவையான பொருட்களாகும். இதன் பாரம்பரிய தயாரிப்பில் காரம் குறைவாக இருக்கும்; ஆனால் தூள் மிளகு சேர்ப்பதனால் காரம் அதிகமாக இருக்கும். இதனுடைய மற்றொரு வகையாக உருளைக்கிழங்கிற்குப் பதிலாக வற்றாளை பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dalal, T. (2007). Punjabi Khana. Sanjay & Company. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89491-54-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜீரா ஆலு ரெசிபி . இந்தியா டைம்ஸ்.
- வீட்டில் எளிதான வழியில் ஜீரா ஆலு ரெசிபி பரணிடப்பட்டது 2021-07-18 at the வந்தவழி இயந்திரம் . குக்மிண்ட்